(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் மாவட்ட மீனவ பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் மீனவ கொள்கை மீனவ சட்டங்களில் மேற்க் கொள்ளபட வேண்டிய திருத்தங்கள் என்பன தொடர்பான மீனவ மக்களின் கருத்தறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி தில்லையடி மீனவ சங்கத்தின் தலைவர் எம்.பீ. சபுறுல்லாஹ் தலைமையில் தில்லையடி மீனவ சங்க கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஜே. பத்மநாதன், மாவட்ட செயற்பாட்டாளர் எம். ஹிஜாஜ். தில்லையடி தாருல் அர்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம். அன்வர் தீன் மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் கோ குணசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்
புத்தளம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அதற்கு மீனவர் மக்கள் முன்வைக்கும் தீர்வுகள் அத்தோடு நடைமுறையில் உள்ள மீனவக் கொள்கைகள் அது எவ்வாறு அமுல்படுத்த படுகின்றது. அத்தோடு மீனவ சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் அதற்காக மீனவ சமூகம் முன் வைக்கும் ஆலோசனைகள் அதற்கான சாத்தியப்பாடுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது மேலும் சர்வதேச வழிகாட்டல்களில் சீ.எப்.எஸ் மற்றும் எஸ்.எஸ்.எப் என்பன தொடர்பான தெளிவூட்டல்கள் அத்தோடு ஐ.யூ.யூ மற்றும் ஜீ பி.எஸ் கருவிகளின் பயன்பாடு அதன் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு மீனவ சமூகத்தரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மீனவக் கொள்கையை தயாரிப்பதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டதுடன் தேசிய மீனவ கொள்கை உருவாக்கத்தில் புத்தளம் மாவட்ட அறிக்கையும் சமர்ப்பிப்பதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்படும் எனவும் இணைப்பாளர் குறிப்பிட்டார்.



