(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் கல்வி பொதுத்தரா தர சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளது அதன்படி முஹம்மத் பாரிஸ் பாத்திமா அல்ஹா என்ற மாணவி 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன் முஹம்மத் முபீன் முபா மற்றும் கலீல்ரஹ்மான் பாத்திமா ரிஸ்னா ஆகிய இரு மாணவிகளும் 8A, B சித்திகளை பெற்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்து பாடசாலைக்கும், ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் பீ.எம் முஸ்னி தெரிவித்தார்.
மேலும் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 82 சதவீதமானவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் எனவும் இச் சிறந்த பெறுபேறுகள் பெற்றுக் கொடுத்துள்ள மாணவ மாணவிகளுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவ, மாணவியர் சங்கம் சார்பாக தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


