JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் கௌரவிப்பு

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய 14  மாணவர்களில் 13 மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றிய  சகல மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எஸ் எச் எம் அஷான் தலைமையில் திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது மாணவர்கள் அனைவரும் மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இதில் உரையாற்றிய அதிபர் எஸ் எச் எம் அஷான் இம் மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த சகல தரப்பினருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக தமது நன்றி கலந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال