JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் மாதிரிச்சந்தை !

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கமு/கமு அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின்  மாணவர்களின் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் ஒன்றான மாணவர் மாதிரிச்சந்தை நேற்று (09)பாடசாலையில் நடைபெற்றது.


வகுப்பாசிரியர்களான எஸ்.எம்.ஏ.றிபாய், ஏ.டப்ளியு.எப்.நிப்றா மற்றும் தேசிய கல்விக் கல்லூரிப் பயிலுனர் ஆசிரியர்களான என்.ஆர்.கீர்த்தனா லக்சி, என்.நஸ்றீனா மற்றும் பெற்றோர்கள் ஆகியோரினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இம்மாதிரிச் சந்தையின் திறப்பு விழாவினை பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக்,பிரதி அதிபர் எம்.வை.எம்.சாதீக்,உதவி அதிபர் இஷட்.ரி.ஸியாம் ஆரம்பப்பிரிவின் பகுதித்தலைவி எச்.ஆமினா பேகம் மற்றும் ஏனைய பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


தரம் 03 ஆரம்ப பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும்,சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுனுக்கங்கள்,என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம் பெற்றது.


குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விழைந்த காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள்,பழங்கள்,உணவுப் பொருட்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.


சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال