(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெட்பானா பகுதியில் வைத்து திங்கட்கிழமை (22) பிற்பகல் கண்டக்குழியைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் வியாபாரி புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் தலைமையிலான கற்பிட்டி பொலிஸ் நிலைய விஷேட போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி போதை தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய விஷேட போதை தடுப்பு பிரிவினரால் மேற்க் கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது கண்டக்குழியின் பிரபல போதைப் பொருள் வியாபாரி ரெட்பினா பகுதியில் ஐஸ் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளையும் கைப்பற்றியதாக புத்தளம் போதை தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ் எஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருட்கள் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

ரேட்பானாவில் வைத்து கைது செய்யப்பட்டால் அது நிச்சயம் பாம்பு நவ்பிக்கும் சம்பந்தம் இருக்கும். பாம்பு நவ்பியும் ஐஸ் வியாபாரம் செய்வதாக கேள்வி
ReplyDelete