(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கட்டைக்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் மஹா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 159 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தியினை பீ.ஆசிர்வாதம் மற்றும் எல்.மேரி கிரேஷ் ஆகியோரின் புதல்வரான ஏ அலெக்ஸ் மதுஷல் என்ற மாணவன் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளாதாக தெரிவித்த பாடசாலையின் அதிபர் எப்.ஆர்.எச்.எஸ் தேவகுமாரி மேலும் இறுதியாக இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையிலும் பாடசாலை வரலாற்றில் முதலாவது 3 ஏ சித்தியினை ஏ குயின்டின் இன்பராஜ் மற்றும் எம் நிரன்ஜலா சரோஜனி ஆகியோரின் புதல்வியான கிவ். றக்ஷிகா பெற்று சாதனை படைத்ததனையும் நினைவு கூறினார்.
மேற்படி மாணவர்களின் வெற்றிக்கு அயராது உழைத்த பாட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் என சகலருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






