கடையாமோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட சேகு மீரா நாச்சியார் அவர்கள் இன்று (22) திங்கட்கிழமை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் காலம் சென்ற என். எம். அப்துல் ரஷீத் ஹாஜியாரின் அன்பு மனைவியும், யாசின், அபுசாலி, செய்னுல் ஆப்தீன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலம் சென்ற அஸ்வர், ஜனூன் ஹாஜியார், காலம் சென்ற காதர், ஹினாயா, ஹாஜியானி ஜெஸீமா, சித்தி பரீனா ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம் சென்றவர்களான ஹனீபா, நெய்னா முஹம்மது மற்றும் விருதோடை சேனைக்கடியிருப்பைச் சேர்ந்த அஷ்ரப் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (22) இரவு 7.30pm மணியளவில் கடையாமோட்டை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْـخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْـجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِوَعَذَابِ النَّـار
தகவல்
ஜனூன் ஹாஜியார்
