(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை வலய சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவன் அப்துல் சித்தீக் முஹம்மட் அஸாம் 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ ஜௌபர் தெரிவித்தார்.
பாடசாலையில் (2024) க.பொ.த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டு, இரண்டாவது தடவையான (2025) இம்முறை இப்பாடசாலையில் இருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய, மாணவர்களில் அப்துல் சித்தீக் முஹம்மட் அஸாம் என்ற மாணவன் 9 ஏ சித்தி பெற்றும் எப்.ஏ. அஸ்பாக் என்ற மாணவன் 8ஏ, பி சித்தி பெற்றும் சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பாடசாலைக்கு பெருமை ஏற்படுத்தும் வண்ணம் இச்சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் மற்றும் பகுதித் தலைவர் ஏ.எல்.எம். இர்ஷாத், உதவி பகுதித் தலைவர் அலிரஜாய் மற்றும் இந்த சாதனையை நிலை நாட்ட மேலதிக வகுப்புக்கள் நடைபெறுவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்களான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ. சர்ஜுன் மற்றும் பாடசாலையின் விளையாட்டு துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எம். நுஸ்கி மற்றும் பாடசாலை இடைநிலை கல்விக்குப் பொறுப்பான பிரதியதிபர் ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பிரதியதிபர் எம்.எச். லாபிர் ஆகியோரின் அயராத முயற்சியாலும் கற்பித்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவும் 09 ஏ சித்தி உட்பட ஏனைய உயர்தரம் கற்பதற்கும் தகுதியான பெறுபேற்றையும் இப்பாடசாலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இப்பாடசாலையில் உள்ள மாணவர்கள் அதிகமான பாடங்களில் நூறு வீத சித்தி பெற்று சாதனையும் படைத்துள்ளனர்.


