எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான விசேட வேலைத்திட்டம் வருகின்ற நாட்களில் பரவலாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக புத்தகம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹமத் பொதுமக்களுக்கு தகவல் வழங்குகையில்,
தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புத்தளம் மாநகர சபை மற்றும் டெங்கு ஒழிப்பு குழுவினால் வழங்கப்படும் வழிகாட்டல்களை முறையாகக் கடைப்பிடித்து, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நமது சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு, டெங்குவை ஒழிப்போம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் மாநகர சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், மாநகர சபை உறுப்பினர்கள், சுகாதார அதிகாரிகள் என பலரும் இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.




