JobVibe.lk - Sri Lanka Job Portal

க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் "அதிபரின் உபசரணை" என்ற பெயரில் வரவேற்கப்பட்டனர்.

எம்.யூ.எம்.சனூன்

ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் "அதிபரின் உபசரணை" என்ற பெயரில் திங்கட்கிழமை (22) வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது மாணவர்கள் பதக்கம் அணிவித்தும், சான்றிதழ்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டதோடு, ஆசிரியர்கள் மலர்மாலை அணிவித்து பாராட்டப்பட்டனர். 

அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான், சகலருக்கும் தமது நன்றி கலந்த பாராட்டுக்களை இதன்போது தெரிவித்தார். 

இந்நிகழ்வின் பதக்கங்களுக்கான அனுசரனையினை விஸ்டம் அகடமியும், சான்றிதழ்களுக்கான அனுசரனையை கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எச்.எம். சிபானும் வழங்கி வைத்ததமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال