(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கொத்தான்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக க.பொ த. சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளை முஹம்மது தாஹா பாத்திமா சஹ்தா மற்றும் முஹம்மது நிபால் குர்ஷித் அஹ்மத் ஆகிய இரு மாணவர்களும் பெற்று வரலாற்றுச் சாதனை பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஐ.என்.எம்.எம் லாஹீர் தெரிவித்தார்.
இவ் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்கள், பாடப் பொறுப்பாசிரியர்கள், மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் கட்டார் கொத்தாந்தீவு அமைப்பு, மாணவர்களின் நலனுக்காக பங்களிப்புச் செய்த பழைய மாணவர் சங்கம் (OBA), பழைய மாணவிகள் சங்கம் (OGA), மற்றும் தமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தியாகங்களையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம் சார்பாக தெரிவிப்பதுடன் விஷேடமாக கொத்தான்தீவு ஜூம்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடசாலை நிர்வாகத்துக்கு தொடர்ச்சியாக ஆலோசனைகளையும், ஒத்துளைப்புகளையும் வழங்கி வருகின்றமையிட்டு அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


