JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கோல் காப்பாளர் பயிற்சி.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த நுஸ்ரியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (14) ஆகிய இரண்டு நாட்களும் உதைபந்தாட்ட கோல் காப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று புத்தளம் எருக்கலம்பிட்டி மைதானத்தில் நடைபெற்றது. 

முன்னாள் இலங்கை உதைபந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் மற்றும் கோல் காப்பு பயிற்றுவிப்பாளர் சம்பத் பண்டார அவர்களினால் இந்த பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது. 

மிகவும் பயனுள்ளதாக இந்த பயிற்சி முகாம் இருந்ததாக கலந்து கொண்ட கோல் காப்பாளர்கள் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பத் பண்டார அவர்கள் தற்போது மாலைத்தீவு நாட்டில் கோல் காப்பாளர்களுக்கான பயிற்சிகளை தொழில் ரீதியாக நடாத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال