மலேசியா கல்வி அமைச்சுடன் இணைந்து ICAM ABACUS நிறுவனத்தினால் மலேசியா Genting Highland ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற (2026 - June - 04) சர்வதேச Abacus கணிதப் போட்டியில் உலகின் 13 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் எமது இலங்கையைச் சேர்ந்த ICAM ABACUS நிறுவனத்தினூடாக திரு டி. எம். ஷாபி, மற்றும் திருமதி ஏ. என். எப். சுக்ரா ஆகியோரின் வழிகாட்டுதலின்கீழ் 38 மாணவர்கள் பங்கேற்று உலக அரங்கில் பல வெற்றிகளை சாதித்து நமது நாட்டிற்கும், பாடசாலைகளுக்கும், சமூகத்திற்கும் சர்வதேச பாராட்டுதலுக்குரிய சாதனையை பதிவு செய்துள்ளனர், என்றால் மிகையாகாது.
அந்த வகையில் பொல்கஹவெல மண்ணில் பூத்த மொட்டு மீழாப் இரண்டு சர்வதேசப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டிலும் 2ம் இடத்தினைக் பெற்றுக் கொண்டு தனது சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
ICAM ABACUS பொல்கஹவெல கிளையின் அதிபர் திருமதி ஏ. எப். சரீனாவின் பயிற்சியின் கீழ் போட்டிகளில் கலந்து கொண்ட இம்மாணவி பந்தாவையைச் சேர்ந்த திரு. ரிஸ்மி மற்றும் திருமதி ஷிபா ஆகியோரின் அன்புப் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்:
கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அகீல்

