(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய பாடசாலைகளில் கற்றல்-கற்பித்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஹர்ரம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டலுக்கு இணங்க சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலத்தின் முஹர்ரம் நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்வஹான் தலைமையில் (18) இடம்பெற்றது.
பாடசாலையின் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் அவர்களின் நெறிப்படுத்தலில் இரண்டு கட்டங்களாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. முதல் கட்டத்தில், அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கியதாக விசேட காலை ஆராதனை இடம்பெற்றது. பாடசாலை கலாசாரக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்காலை ஆராதனையை கலாசாரக்குழுவின் தலைவர் மௌலவி அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். அறூஸ் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்ததுடன், மௌலவி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஏ. ரஹீம் அவர்கள் முஹர்ரம் சிறப்பு சொற்பொழிவை ஆற்றியிருந்தார்.
இரண்டாம் கட்டமாக, முஹர்ரம் பண்டிகை நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவரும், சாய்ந்த்மருது வர்த்தக சங்கத் தலைவரும் முபாறக் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பொறின் சிற்றி நிறுவன உரிமையாளர் ஏ.எல்.எம்.ஹில்மி சார்பாக அவரது தந்தை கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்புடன் முஹர்ரம் பண்டிகையினை சிறப்பிக்கும் வகையிலான உணவுப் பண்டங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான இனிப்புப் பண்டங்களுகு சாய்ந்தமருது Foreign City நிறுவனம் அனுசரணை வழங்கி இருந்தது.
முஹர்ரம் பண்டிகை நிகழ்வுகளை பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் அவர்கள் தொகுத்து வழங்கியதுடன் மௌலவி எம்.ஏ.எம். அறூஸ் அவர்கள் முஹர்ரம் சிறப்புரை வழங்கினார். பிரதம அதிதி அவர்கள் தமது உரையில் அல்-ஜலாலில் தனது கடந்த கால அனுபவங்களை உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்தியிருந்ததுடன் பிரதம அதிதி அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மாணவர்களுக்கு பணப்பரிசில்களையும் வழங்கியிருந்தார். இறுதியாக நிருவாகத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எஸ். நபார் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் உதவி அதிபர் ஏ.எம். பாஹிம், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், கட்டுறு பயிலுனர்கள், ஆரம்பப்பிரிவு பயிலுனர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



















