JobVibe.lk - Sri Lanka Job Portal

தமிழ்நாடு அமைச்சர் - ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சென்னையில் சந்திப்பு...!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹானை இன்று வெள்ளிக்கிழமை (19)  சந்தித்தார். 

அவர்  தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றமைக்காக அமைச்சர் ஷாஜஹானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், அதன்  தென்காசி மாவட்டச் செயலாளர் சையது பட்டாணி மற்றும் "மணிச்சுடர்" மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال