JobVibe.lk - Sri Lanka Job Portal

ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

கல்பிட்டி ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு வியாழக்கிழமை (04) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இம்ரான்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்பிட்டி கோட்ட கல்விப்பணிப்பாளர் ஏ.எம். ஜவாத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


இந்த நிகழ்வு, மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. 


மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும், அவர்களின் பொறுப்புணர்வு மற்றும் சமூக சேவைக்கான உறுதிப்பாட்டை உருவாக்குவதற்கான ஒரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது.


இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டதோடு, தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கு அதிதிகளினால் சின்னங்களும் அணிவிக்கப்பட்டன.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال