JobVibe.lk - Sri Lanka Job Portal

குருநாகல் மல்லவப்பிட்டி சமோதய பாடசாலை மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

குருநாகல் மல்லவப்பிட்டி சாமோதய வித்தியாலயத்தின் நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (05) பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது 


இதில் பிரதம அதிதியாக கல்வி உயர் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு மூன்று மாடி கட்டிடத்தை திறந்து வைத்தார் 


இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் பெற்றுக்கொடுக்கும்  இடமாக மட்டுமன்றி, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும். பிள்ளைகள் தங்களது நேரத்தின் பெரும்பகுதியைப் பாடசாலையிலேயே செலவிடுவதால், அந்தச் சூழல் பாசம் மிக்கதாக இருப்பது கட்டாயத் தேவையாகும் என தெரிவித்துள்ளார்.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال