எம்.யூ.எம். சனூன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் அனுசரணையுடன், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் அனுசரணையுடன், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி அண்மையில் (மே 30 மற்றும் 31) புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இம்மாபெரும் தொடரில் சுமார் 40 அணிகள் பங்கேற்றதுடன், 500-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், பழைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததன் பிரதான நோக்கங்களில் ஒன்று, சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, ஒழுக்கச் சீர்கேடுகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் பல்வேறு தீய பழக்கவழக்கங்களிலிருந்து அவர்களை பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளைக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தி, எதிர்கால சமூக மற்றும் சமயப் பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேவேளை, இச்சுற்றுப்போட்டியின் மூலம் திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் நீண்டகால தேவையாக இருந்து வரும் பாடசாலை பஸ் சேவையை ஏற்படுத்துவதற்காக நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 80 ஆண்டுகளாக நிலவி வந்த இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.
இந்நிகழ்வின் மூலம் மொத்தமாக ரூபா 479,500/- (நான்கு இலட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து ஐந்நூறு) நிதி திரட்டப்பட்டது.
இத்தொகையில் டிக்கெட் விற்பனை, அணிகளின் விண்ணப்பக் கட்டணங்கள், நடுவர்களின் நன்கொடைகள் மற்றும் வெற்றி பெற்ற அணிகள் தங்களது பரிசுத் தொகைகளில் இருந்து மீள நன்கொடையாக வழங்கிய தொகைகளும் அடங்குகின்றன.
குறிப்பாக, வெற்றி பெற்ற அணிகளான இஸட் போர்ஸ் (ரூ. 50,000), ட்ரோஸியன்ஸ் (ரூ. 50,000) மற்றும் சீகோன் (ரூ. 25,000) ஆகியவை தங்களது பரிசுத் தொகைகளை மீண்டும் பாடசாலை பஸ் திட்டத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளமை பாராட்டத்தக்க முன்னுதாரணமாகும்.
இதற்காக ஜம்இய்யா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் திரு. நஜீம் அவர்களுக்கும், இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
நிகழ்வை வெற்றிகரமாக ஒழுங்குபடுத்திய ஸாஹிரா பாடசாலையின் பழைய மாணவர்கள்
A.H.M.M. Hassan
M.N.M. Ilham
M.M.M. Viyas
A.M. Jarsath
M.R.M. Sinhab
M.R.M. Asam
A.W. Usama
M.S.M. Zahran
M.S.M. Thasneem
M.A.M. Asam Omar
S.M. Sabiq
S.M. Inas
S.A.C.M. Raizudeen
K.M. Hisam
S.A.C.P. Marikkar
A.N.M. Jifrey
F.H.S. Finos
மேற்கண்ட அனைவருக்கும், மேலும் தன்னார்வத் தொண்டர்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களுக்கும் ஜம்இய்யா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
போட்டி நடுவர்கள்,
M.A.M. Fasrin
S.M. Inas
S.M. Jifry
A.O.M. Asam
M.S. Nawfi
M.R.M. Abdhullah
இப்போட்டித் தொடரை சிறப்பாக நடாத்துவதில் பங்களித்த மேற்கண்ட நடுவர்களுக்கும் ஜம்இய்யா தனது மனமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்கிறது.









