JobVibe.lk - Sri Lanka Job Portal

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை கண்டக்குழி குடாவில் கைப்பற்றிய கடற்படை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய தொகுதியுடன் இரண்டு (02) படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தினால் கற்பிட்டி, கண்டக்குழி குடா கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரைப் பகுதியில் இரண்டு (02) படகுகளில் இருந்த முப்பது (30) சந்தேகத்திற்கிடமான பொதிகள் சோதனையிடப்பட்டன. இதன்போது, அந்தப் பொதிகளில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட சுமார் எட்டாயிரத்து நூறு (8100) சவர்காரங்களும், சுமார் எட்டாயிரத்து அறுநூற்று நாற்பது (8640) ஷாம்பு பக்கெட்டுகளும் மற்றும் இரண்டு (02) படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கடற்படை நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நுகர்வு பொருட்கள் மற்றும் படகுகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال