(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கண்டல்குடா கடற்கரையையில் காணப்படும் விமானப்படை தளத்தின் எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கும் சவக்காரம் , செம்போ மற்றும் கட்டி மஞ்சல் என்பன அடங்கிய 26 உறைகள் புதன்கிழமை (17) கற்பிட்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரி கபில பிரேமதாசவின் வழிக்காட்டலின் கீழ் இயங்கும் எஸ்.எஸ் பண்டார தலைமையிலான விஷேட குற்றத் தடுப்பு பொலிஸ் குழுவினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளபபட்டு கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரி கபில பிரேமதாசவின் வழிக்காட்டலின் கீழ் கற்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் எஸ் எஸ் பெர்னாண்டோ தலைமையிலான விஷேட பொலிஸ் குழு விஷேட சுற்றிவளைப்புக்களை மேற்க் கொண்டு வரும் நிலையில் மேற்படி பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புதன்கிழமை (17) கண்டல்குடா கரையோரத்தில் அமைந்துள்ள விமானப்படையின் எல்லைப் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 26 உறைகளை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் விஷேட குழுவினர் கைப்பற்றியதாகவும் மூடைகள் கற்பிட்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொறுப்பதிகாரி கபில பிரேமதாச முன்னிலையில் பரிசோதிக்கப்பட்ட போது அதில் சவட்காரம், செம்போ மற்றும் கட்டி மஞ்சள் என்பன காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி சவட்காரம் 09 உறைகளில் 1920 கட்டிகளும், செம்போ 08 உறைகளில் 45888 பகட்டுகளும், கட்டி மஞ்சள் 09 உறைகளில் 420 கிலோ 50 கிராமும் காணப்பட்டதாக தெரிவித்துள்ள கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.









