JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தம்பபண்ணி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் முஹர்ரம் புதுவருட தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (19) காலை அதிபர் எம்.டீ.எம்.மனாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி, புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான எம்.ஜே.எம்.பைசல் கலந்து சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் முஹர்ரம் தொடர்பாட கலை கலாச்சார நிகழ்வுகள், மாணவர்களின் உரைகள், கவிதைகள் என நிகழ்வுகள் யாவும் ஆன்மீக ரீதியாகவும், கல் சார் உணர்வு பூர்வமாகவும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் தனதுரையில்,

முஹர்ரம் மாதம் என்பது இஸ்லாமிய வரலாற்றில் தியாகத்தின், பொறுமையின், உண்மையின் பக்கம் நிற்கும் மாதமாகும். கர்பலா சம்பவம் நமக்கு உணர்த்துவது அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், உண்மையை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும்.

கர்பலா இப்படியான  படிப்பினை தருவதோடு நாங்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல சிறந்த கல்வியை பெற்று சமூகத்திற்கு சேவை செய்ய கூடியவர்களாக உருவாக வேண்டும் என்பதை மாணவர்கள் விளங்கும் வகையில் தெளிவு படுத்தினார்.

இந்நிகழ்வில் பாடசாலை உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர், ஊர் பிரமுகர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலை வளாகத்தில் பலன் தரும் மரங்களை நாட்டி வைத்ததோடு, பாராளுமன்ற உறுப்பினரை கௌரவிக்கும் வகையில் அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.














Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال