JobVibe.lk - Sri Lanka Job Portal

சாய்ந்தமருது அல்-ஹிலால் மீண்டும் சதுரங்கத்தில் சாதனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கை பாடசாலை சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில், கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டி 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கல்முனை பற்றிமா கல்லூரியில்  இடம்பெற்றது.


இச்சதுரங்கப் போட்டியில் சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையின் மாணவர்களான கே.என். சம்லான்  நஜ்தி மற்றும் என்.எம். பாதிஹ் ஆகியோர் 12வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் MERIT தகுதி பெற்று  மாகாண மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர். 


போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பார்களான எம்.எஸ்.எம். நுஸ்கி, ஏ.ஜீ. மஸ்பூத் ஆகியோரையும் பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ ஜௌபர் உட்பட பிரதி அதிபர்கள், கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال