JobVibe.lk - Sri Lanka Job Portal

APL இறுதிப்போட்டியில் Pebbles Campus அனுசரணையிலான KARUNKODY RICING அணி சம்பியன்

அக்கரைப்பற்று பிரீமியர் லீக் (APL) கிரிக்கெட் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி  இன்று (19) இரவு  நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் மோதிய KARUNKODY RICING மற்றும் KARUNKODI PUYAL அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற KARUNKODI PUYAL அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய Pebbles Campus அனுசரணையிலான KARUNKODY RICING அணி, 8 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று எதிரணிக்கு 85 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

85 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய KARUNKODI PUYAL அணி, KARUNKODY RICING அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான களத்தடுப்பை சமாளிக்க முடியாமல் 8 ஓவர்கள் முடிவில் 65 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்மூலம் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற KARUNKODY RICING அணி, APL 2026 தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் Pebbles Campus-இன் பெயரை கிரிக்கெட் அரங்கிலும் உயர்த்திய KARUNKODY RICING அணி வீரர்களுக்கு Pebbles Campus நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) Inshaf Sarifdeen தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال