JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதலாவது 9A சித்தி பெற்று சாதனை!.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பெருக்குவட்டான், அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன் முறையாக கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் முஹம்மது றிஸ்வி றிஷா என்ற மாணவி சகல பாடங்களிலும் 9A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் அம்மாணவிக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் எஸ் எச் எம் அஷான் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இம்முறை இடம் பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை க்கு புத்தளம் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவர்களில் 93 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் இம் முயற்சிக்கு அயராது உழைத்துள்ள பாடசாலையின் அதிபர் எஸ் எச் எம் அஷான் தலைமையிலான பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர்கள் சங்கம் பெற்றோர்கள் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال