JobVibe.lk - Sri Lanka Job Portal

ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய வரலாற்றில் முதலாவது 9 ஏ சித்தி பெற்று சாதனை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் லாபீர் பாத்திமா சிம்ஹா என்ற மாணவி சகல பாடங்களிலும் 9 ஏ சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அம் மாணவிக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் எம் ஐ எம் இம்ரான்கான் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இம்முறை இடம் பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு கற்பிட்டி ஏத்தாளை அரசினர் ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய மாணவர்களில் 90 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்து உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال