JobVibe.lk - Sri Lanka Job Portal

கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி தரம் பத்து மாணவி ஹஸ்மத்கான் ஹிமா க.பொ.த (சா/த) பரீட்சை எழுதி 8 ஏ 1 சீ சித்தி பெற்று சாதனை

  (கற்பிட்டி எம். எச். எம. சியாஜ்)

இம்முறை (2026) வெளியான பெறுபேறுகளின் படி தரம் 10 ல் கல்வி கற்ற மாணவி ஹஸ்மத்கான் ஹிமா க. பொ. (சா/த) பரீட்சையில் எழுதி 8 ஏ 1 சீ பெற்றுள்ளார்.

இவர் தனது ஆரம்ப கல்வியான தரம் 01 தொடக்கம் 05 வரை கனமூலை  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளை பெற்று சித்தியடைந்ததுடன்,  தரம் 06 தொடக்கம் கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். தற்போது மதுரங்குளி மேர்ஷி கல்வி வளாகத்தில் க. பொ. த. (உ/த) விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஹஸ்மத்கான் மற்றும் பு/பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியை  எஸ். எப்.  பர்ஜீஸ் ஆகியோரின் செல்வப் புதல்வியாவார்.

இம்மாணவிக்கு  வழிகாட்டிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை பெற்றோர்களும், கல்விச் சமூகமும் பாராட்டுவதோடு,  இம்மாணவியின் எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்க இறைவனிடம் பிராத்திக்கின்றார்கள்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال