(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் பிரதேச பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் நாஹூர் ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (19) ஜூம்ஆ தொழுகையை அடுத்து புத்தளம் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி , நிஹால் குலதுங்கவின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
புத்தளம் நாஹூர் பள்ளி மஹல்லாவில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு வேலை திட்டத்தை நினைவு படுத்திய புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி , நிஹால் குலதுங்க புத்தளம் பிரதேசத்தில் போதை பொருட்களை ஒழிப்பதற்காக புத்தளம் பொலிஸாருக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கலந்து கொண்டிருந்த பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் பொறுப்பதிகாரி வேண்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


