JobVibe.lk - Sri Lanka Job Portal

நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நானூற்று எழுபத்தேழு (477) கிலோ பீடி இலைகளை அதனை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள்  (01) டிங்கி உடன் கைது செய்யப்பட்டனர். 


இதன்படி, நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​குறித்த களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கெளனியால் பரிசோதிக்கப்பட்டது. அங்கு, பதின்மூன்று (13) பைகளில்  அடைக்கப்பட்ட நானூற்று எழுபத்தேழு (477) கிலோ பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் (02) டிங்கி படகும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 


மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சேத்தப்பாடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 36 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், டிங்கி மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال