JobVibe.lk - Sri Lanka Job Portal

36 வருட அரச பணியிலிருந்து பீ.எம்.ஏ பதுறுன்நிஷா ஆசிரியை ஓய்வு பெற்றார்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர் பீ.எம்.ஏ பதுறுன்நிஷாவின் பனி நிறைவும்  கௌரவிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (23) பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் ஜவாத் மற்றும் புத்தளம் வலய கல்விப் பணிமனையின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் ( உடற்கல்வி )எஸ் டி. பைறுஸமான் (ஓய்வு நிலை) சிறப்பு அதிதிகளாக கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் முன்னாள் அதிபர் எக்ஸ் ரெஜினா மற்றும் எம்.பீ சுலைஹா உம்மா ஆகியோருடன் பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் மௌலவி எம்.டி றிப்கான் (றஹ்மானி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஆசியர் சேவையில் 36 வருடங்கள் சேவையாற்றிய பீ.எம் ஏ. பதுறுன்நிஷா ஆசிரியை  கற்பிட்டி ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயம், குறிஞ்சிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியதுடன் தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் மாத்திரம் சிறிது காலம் அதிபராக கடமை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال