புரவலர் ஹாஷிம் உமரினால் பல்கலை மாணவர்களுக்கு லெப்டெப் அன்பளிப்பு.!சிறப்பாக நடந்தேறிய 22ஆம் கட்ட விநியோகம்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்  திட்டத்தின் 22ஆம் கட்ட விநியோகம் இன்று சனிக்கிழமை (13) கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பௌண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்றது.


இதன்போது 05 மாணவர்களுக்கு மடி கணனி வழங்கி வைக்கப்பட்டது.


இத்திட்டத்தின் கீழ் இதுவரையான 22 கட்டங்களிலும் மொத்தமாக 110 பல்கலை மாணவர்களுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் மடி கணனிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹாஷிம் உமர் பௌண்டேசன் ஸ்தாபகரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல ஊடக நிறுவனங்களில் இருந்தும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.










Previous Post Next Post

نموذج الاتصال