JobVibe.lk - Sri Lanka Job Portal

நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலைய சுற்றுமதில் நிர்மாணப் பணிகள்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

பாதுகாப்பான வர்த்தகச் சூழலை நோக்கி நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தை உருவாக்கும் நோக்கில்  கடந்த 25 வருடங்களாக குறைபாடாக காணப்பட்ட சுற்று மதில் இன்மை பிரச்சனையை நிவர்த்தி செய்யும் வகையில் அதனை சுற்றி மதில் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


​கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்  றிகாஸின் விசேட கவனத்தின் கீழ் நீண்ட காலத் தேவையாக இருந்த மேற்படி பாதுகாப்பு மதில் தற்போது நிர்மாணிக்கப்படுகின்றது.


நீண்டகாலமாக வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இடையூறாக இருந்த ஆடு, மாடுகளின் நடமாட்டம் இந்த மதில் அமைக்கப்படுவதன் மூலம்  முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு நவீனமயமான வர்த்தக மையமாக நுரைச்சோலையை மாற்றியமைப்பதற்கான முழு முயற்சியும் இந்த அரசின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال