JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டியில் டித்வா புயல் பாதிப்புக்கான காசோலை வழங்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

டித்வா புயலால் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் முழுமையாக மற்றும் பகுதி அளவில் சேதமடைந்த 442 வீடுகளில் முதற் கட்டமாக சேதமடைந்த 07 வீடுகளுக்கும் 21 வர்த்தக நிலையங்களுக்கான முதல் தவணை காசோலைகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (02)  கற்பிட்டி  பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி தலைமையில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான எம் ஜே எம்  பைசல் , கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ எஸ் எம் றிகாஸ் ,கற்பிட்டி பிரதேச சபையின்  பிரதி தவிசாளர் சமன் குமார ஹேரத்  மற்றும் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள்,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் டித்வா புயலால் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் முழுயாக மற்றும் பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال