JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி றீகா சாம்பியனாக தெரிவு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் 18 வயது பெண்கள் பிரிவில் எம் ஆர் எப் றீகா ஈட்டி எறிதல் , குண்டெறிதல் மற்றும்  தட்டெறிதல் ஆகிய மூன்றிலும் முதலாம் இடம் பெற்று கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் 18 வயது பெண்களுக்கான சாம்பியன் பட்டத்தினை பெற்றுக் கொண்டார்


மேலும் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 20 வயது பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் எம் ஏ எப் ஹிஸ்னா முதலிடத்தையும், 16 வயது பெண்களுக்கான குண்டறிதல் போட்டியில் எம் .ஏ.எப் அமானி மூன்றாம் இடத்தினையும் பெற்று வலய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் எம் பீ.எம் ஜெசிம் இவர்களுக்கு பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் எஸ் ஐ எம் அம்ஜத் மற்றும் எம்.அஹ்சாப் ஆகியோருக்கும் வெற்றிட்டிய மாணவர்களுக்கும்  ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர்கள் அகியோர் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post

نموذج الاتصال