JobVibe.lk - Sri Lanka Job Portal

உடப்பு ஊடகவியலாளர் க.மகாதேவன் எழுதிய விதியின் விளையாட்டு சிறுகதை தொகுதி நூல் வெளியீடு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

திவ்விய ஒளி கலைமன்றத்தின்” ஏற்பாட்டில் உடப்பு ஊடகவியலாளரும், கலைஞரும், ஓய்வு நிலை ஆசிரியருமான “கலாதினி” க.மகாதேவன் எழுதிய “விதியின் விளையாட்டு” என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு உடப்பு இந்துநெறிக் கழக மண்டபத்தில் “ ஞாயிற்றுக்கிழமை (10) திவ்விய ஒளி கலை மன்றத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் உடப்புஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கியதுடன் ஆராச்சிக்கட்டு பிரதேச சபை உறுப்பினர் திரு.ந.கமலேஸ்வரன்,ஶ்ரீ கிருஷ்ணா பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் திரு.க.தொண்டமான்,கவிஞர் திரு.பெ.வீரசுந்தரேஸ்வரன் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றது. 


நூலின் முதற்பிரதி ஆலய பிரதம  குருக்களுக்கு நூலாசிரியரால் வழங்கி வைக்கப்பட்டது 


நாலாசிரியருக்கு திவ்விய ஒளி கலைமன்றத்தினால் அதன் செயலாளர் திரு.வை.இராமச்சந்திரன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, மன்றத்தின் பொருளாளரினால் நினைவுக் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வினை கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய உதவி அதிபர் திரு.ச.கோபாலன் சிறப்பாக தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال