JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர் தர பரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் பரிட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் வியாழக்கிழமை (07) பாடசாலையின் அதிபர் எஸ். எச். எம். அசான் தலைமையில் மிக விமர்சையாக  இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிமனையின் கல்விப் பணிப்பாளர் எம். ஐ.எம். நௌஸாத், கௌரவ அதிதிகளாக புத்தளம் தெற்கு கோட்ட தமிழ் பாட இணைப்பாளர் வீ. லெஸ்லி, புத்தளம் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம். எம். எம். மிஹ்ளார் (நளீமி) ஆகியோர் கலந்து  சிறப்பித்தனர்.


இம்முறை கல்வி பொதுத் தராதர உயர் பரிட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பரீட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். அத்தோடு பாடசாலையில் கற்பித்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.


இதேவேளை  மாணவர்களின் இந்த வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களுக்கும் இதன் போது பரிசளிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, புதிதாக கடமையேற்றுள்ள ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பழைய மாணவியர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

























Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال