JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள கௌரவிப்பு நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர் தர பரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் பரிட்சைக்கு தோற்றிய ஏனைய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் 2026/05/07 ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலையின் அதிபர் எஸ். எச். எம். அசான் தலைமையில் இடம்பெற உள்ளது 


இந் நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிமனைப் பணிப்பாளர் எம் ஐ எம் நௌஸாத் கலந்து கொள்வதுடன் கௌரவ அதிதிகளாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்விப் பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர்களான எம். எம். எம். இஸ்மத் மற்றும் எஸ்.எச்.ஏ றைஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர் 


இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை அதிபர், ஆசிரியர்களுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பழைய மாணவியர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال