இந்தோனேசிய கடற்படைக் கப்பலான 'KRI BIMA SUCI - 945' நல்லெண்ணப் பயணத்திற்காக இலங்கையை வந்தடைந்தது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ASEAN Plus Cadet Sail (APCS) – 2026 திட்டத்தின் கீழ், இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேடட் அதிகாரிகள் உட்பட இருபத்தாறு (26) வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளுடன், இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘KRI BIMA SUCI - 945’ நல்லெண்ணப் பயணத்திற்காக புதன்கிழமை (15) இலங்கையை வந்தடைந்ததையடுத்து,
கடற்படை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பலை வரவேற்றனர்.
இலங்கைக்கு வந்துள்ள 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் SUGENG HARIYANTO கடமையாற்றுகின்றார்.
கடற்படைப் பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்ட கடற்படை வீர்ர்கள், 'KRI BIMA SUCI - 945' என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் போது அதனை ஆய்வு செய்வதில் பங்கேற்க உள்ளனர்.
இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், தீவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் அக் கப்பலின் குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.







No comments