JobVibe.lk - Sri Lanka Job Portal

திகழி சந்தியில் மினி வேன் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் காயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியில் திகழி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்ற மினி வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 


இவ் விபத்து தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது பாலாவி பக்க வீதியில் வந்த மினி வேன் திகழி சந்தியில் உள் வீதிக்கு திருப்பப்பட்ட நிலையில் கற்பிட்டி பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளும் அதே சந்தியில் உள் வீதிக்கு திருப்ப முற்பட்ட வேலையிலேயே மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது இதன்போது மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال