JobVibe.lk - Sri Lanka Job Portal

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நாட்டின் அபிவிருத்திக்குப் பொதுப் போக்குவரத்து அத்தியாவசியமானது என்பதுடன், அது நிலையானதாகவும் இருக்க வேண்டும். மக்களின் தேவைகளுக்கேற்ப, இலகுவாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அதேநேரத்தில், பொதுமக்களுக்கு நெருக்கமான ஒரு பொதுப் போக்குவரத்துச் சேவையே அவசியமாகும்.


 நாட்டின் அனைத்து மக்களும் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு புகையிரதச் சேவையைக் கட்டியெழுப்புவதே அரசின் கொள்கைரீதியான நோக்கமாகும்


ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதிப் பங்களிப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை புகையிரதத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'புகையிரத வினைத்திறனை மேம்படுத்தும் திட்டத்தின்' முதலாவது அத்தியாயத்தின் கீழ், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் முதலாம் கட்டப் பணிகள் வியாழக்கிழமை (09) ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இதில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு சிறப்பித்தார்.










Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال