JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. நகரில் உள்ள 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

எம்.யூ.எம்.சனூன்

அகில  இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கமானது புத்தளம் ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. நகரில் உள்ள 125  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் அப்பியாச கொப்பிகளை வழங்கி வைத்துள்ளது.


வை.எம்.எம்.ஏ. முன்னாள் தேசிய தலைவர் எம்.எஸ்.எம். ரஹீம், யாழ். வை.எம்.எம்.ஏ. மாவட்ட  இணைப்பாளர்  எஸ்.ஏ.சீ. மஹ்ரூப் ஆகியோர் இவைகளை வழங்கி வைத்தனர்.


இந்நிகழ்வில் யாழ். வை.எம்.எம்.ஏ. தலைவர் ஈ.எம்.வாஜித், மஸ்ஜிதுல் ஸுப்பானுல் முஸ்லிமின் நிர்வாகத்தின் செயலாளர் கே.சீ.எம். முஹைமீன், அல்-இக்ரா மகளிர் அமைப்பின் தலைவி ஏ.எஸ். வஜீஹா, "யாழவன்" நசீர் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال