JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் சென் என்ரூஸ் கல்லூரிக்கு பஸ் வண்டி அன்பளிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் சென்  என்ரூஸ் மத்திய கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் திங்கட்கிழமை (06) திகதி பஸ் வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.


புத்தளம் சென் என்ரூஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 140 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழைய மாணவர் சங்கத்தினால் பிரம்மாண்டமான ஜூபிலி (Jubilee) திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலைக்கு ஒரு பஸ் வண்டியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்த விழா நடத்தப்பட்டது.


இந்த ஜுபிலி விழாவின் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து சுமார் ஒரு கோடியே 12 இலட்சம் (11.2 மில்லியன்) ரூபா செலவில் இந்தப்புதிய பஸ் வண்டி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


பழைய மாணவர் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களால் இந்தப் புதிய பஸ் வண்டி, கல்லூரியின் அதிபர் ஸ்ரீலக் பெர்னாண்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபரினால் அந்த பஸ் வண்டி மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال