JobVibe.lk - Sri Lanka Job Portal

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான விசேட குழுவின் அறிக்கை, விடயதான அமைச்சரிடம் கையளிப்பு.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)                                                                            வெளிநாடுகளில் வாழும் 15 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் உள்நாட்டுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் நடைமுறை ரீதியான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

                                                                                                                                                                    இந்த அறிக்கையைப் பொறுப்பேற்று கருத்துத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு, நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்காதிருப்பது அநீதியானது எனக் குறிப்பிட்டார்.

                                                                                                                                                                  அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: "இது இலங்கை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். இதில் சுமார் 16 வெவ்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர், இது குறித்து விரிவாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது."





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال