JobVibe.lk - Sri Lanka Job Portal

ஹபராதுவ பகுதியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 (கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஹபராதுவ கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் செவ்வாய்க்கிழமை (14) மாலை நீரில் மூழ்கியுள்ளனர்.


 அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு களுக்கல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர்கள் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களாவர். இவர்கள் கட்டுநாயக்க பகுதியில் இருந்து சுற்றுலா வந்திருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


ஹபராதுவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال