JobVibe.lk - Sri Lanka Job Portal

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

வக்பு சபையின் புதிய தலைவராக மர்ஷட் பாரி நியமிக்கப்பட்டுள்ளார். 


கடந்த வெள்ளிக்கிழமை (24)  இந்த நியமனம், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


ஸ்ரீலங்கா – மலேசியா பிஸ்னஸ் கவுன்சிலின் தலைவரான இவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், ரொட்டரி கழகம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புக்களின் சிரேஷ்ட உறுப்பினராவார். 


இதேவேளை, 27ஆவது வக்பு சபையின் புதிய உறுப்பினர்களுக்கான நியமனம் செவ்வாய்க்கிழமை (28) சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பரினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال