Breaking News

மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதியில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக பிடித்த 36 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், மன்னாரின் இலுப்பைக்கடவை கடல் பகுதியில் புதன்கிழமை (2026 ஏப்ரல் 01 ) இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,  ​​சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தாறு (36) நபர்களையும், ஆயிரத்து எழுநூற்று ஐம்பது (1750) கடல் அட்டைகளுடன், ஆறு (06) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.   


வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான புவனேக, மன்னார், இலுப்பைக்கடவை கடற்பகுதியை உள்ளடக்கி நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​ஆறு (06) சந்தேகத்திற்கிடமான படகுகள் ஆய்வு செய்யப்பட்டன. சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்தாறு (36) நபர்கள், ஆயிரத்து எழுநூற்று ஐம்பது (1750) கடல் அட்டைகள், ஆறு (06) சபடகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.    

 

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், இலுப்பைக்கடவை மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், 22 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னாரில் உள்ள பூநகரி மீன்வள ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர், கிளிநொச்சி மீன்வள ஆய்வகத்தின் அறிவுறுத்தல்களின்படி, நாச்சிக்குடா இறங்குத்துறையை அன்மித்த கடற்பகுதியில் கடல் அட்டைகள் விடுவிக்கப்பட்டது.





No comments