JobVibe.lk - Sri Lanka Job Portal

கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்யாலயத்திற்கு பொறல் வழங்கி வைத்த பிரதேச சபை உறுப்பினர் ஹாரூன்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி  பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரூன் கொத்தாந்தீவு  முஸ்லிம் மகா வித்யாலயத்தின் உள்ளக வீதி மற்றும் மைதான புணரமைப்புக்காக  தனது சொந்த நிதியிலிருந்து  பொறல் வழங்கி வைத்தார்.


புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஐ.என்.எம்.எம். லாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் சுமார் ஒரு இலடசத்து ஐம்பதாயிரம்  (150,000/=) ரூபா பெறுமதியான பொறல்களை வழங்கி வைத்துள்ளார்.


இதனை வழங்கிய பிரதேச சபை உறுப்பினருக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் சார்பில் தமது நன்றியை தெரிவிப்பதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال