Breaking News

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படக்கொன்றுடன் 10 மீனவர்கள் கடற்படையினரால் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் புதன்கிழமை ( 08) இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.


அதன்படி, புதன்கிழமை (08) இரவு, மன்னாருக்கு வடக்கே உள்ளூர் நீர்ப்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடிப் படகுகளை வட மத்திய கடற்படை கட்டளையினர் கண்காணித்தனர். மேலும், அந்த மீன்பிடிப் படகுகளை இலங்கையின் நீர்ப்பரப்பிலிருந்து அகற்றுவதற்காக, குறித்த கடற்படைக் கட்டளையகத்துடன் இணைக்கப்பட்ட கப்பல்களைக் கொண்டு ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில், உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடிப் படகில் இலங்கை கடற்படையினர் சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு செய்ததுடன், எல்லைச் சட்டங்களை மீறி சட்டவிரோத இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.


மேலும், குறித்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.




No comments