மாலைதீவு கடலோர காவல்படை கப்பலான 'HURAVEE' இலங்கையை வந்தடைந்தது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
மாலைதீவு கடலோர காவல்படை கப்பலான 'HURAVEE' திங்கட்கிழமை (02) திகதி இலங்கைக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன் , மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு இணங்க குறித்த கப்பலை வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Offshore patrol vessel வகை 'HURAVEE' என்ற கப்பலானது 48.9 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் Ahmed Nafiu Mohamed செயல்படுகின்றார்.
கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தளங்களை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.




No comments