JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் வழங்கும் தெளிவு ரமழான் நேரலை நிகழ்ச்சி

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக பல்லாண்டு காலமாக கற்பிட்டியில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை மேற்க் கொண்டு கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் முதன் முறையாக முகநூல் வாயிலாக முன்னெடுத்துள்ள தெளிவு எனும் முதலாவது நேரலை நிகழ்ச்சி கற்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் இருந்து முகநூல் வழியாக நேரலையாக கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷனின் தலைவர் ஏ.சி.எம்.ஏ. முத்தலிப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இஸ்லாம் பற்றிய தெளிவூட்டல்களை கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள உலமாக்களைக் கொண்டு கேள்வி பதில் மூலம் பத்து நாட்களுக்கு பத்து வித்தியாசமான தலைப்புக்களில் இடம்பெறும் இந்நிகழ்வின் முதல் நிகழ்ச்சியில் ரமழானும் நாமும் எனும் தலைப்பில் தாருல் அர்கம் ஜூம்ஆ பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம் டி றிப்கான் (றஹ்மானி) கலந்து சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியினை கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷனின் இணைப்பாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம் அஸ்கர் தொகுத்து வழங்குவதுடன் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவர் எம் யூ.எம் ஆசிமின் கஸிதாவும் இடம்பெற்றது.


நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உலமா மற்றும் ரஹ்மானிய்யா மாணவர்களுக்கும் கற்பிட்டி நஷ்ர் பவுண்டேஷன் நினைச் சின்னங்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال