JobVibe.lk - Sri Lanka Job Portal

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை நிலையங்களுக்கான #FutureLeaders சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழிகாட்டும் “Future Leaders” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட “Islamic Life Studies” 7 நாள் பயிற்சி நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை நிலையங்களில் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயலில், மாநகர சபை உறுப்பினர் எஸ். எம். சபீஸ் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மேலும் வளவாளர்களாக Dr. A. L. அலாவுதீன் (MBBS), Dr. A. H. ரிஃபாஸ் (PhD), அஷ்ரக் இஸ்மாயில் (MHRM), L. T. M. இயாஸ் (M.Phil), A. நலீம் (M.Ed), I. சாஹிர் (MBA – UK), அஸ் ஷெய்க் அபுல் ஹாஷிம் (அஷ்அரி), அஸ் ஷெய்க் அல் ஹாஃபிஸ் A. L. சாஜித் ஹுசைன் (பகவி) B.A. (Hons), அஸ் ஷெய்க் ரஸீன் (அன்வரி) M.Ed, மனூஸ் அபூபக்கர் M.A. (Sociology) ஆகியோரும் கலந்து கொண்டனர்.


அத்துடன் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களான ஐ. எல். சிராஜ், சபூர் ஆதம், சஜா முஹம்மட், அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் எம். எஸ். எம். ஜெளபர், கட்சியின் மாவட்டக் குழு செயலாளர் காதர் ஆசிரியர், கட்சியின் முக்கியஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


ரமலான் காலத்தில் இளைஞர்களின் இஸ்லாமிய நெறி, சமூகப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம், சுமார் 1000 மாணவர்களுக்கு பயனடைந்துள்ளதுடன். 20க்கும் மேற்பட்ட நிலையங்களில், 35க்கும் மேற்பட்ட திறமையான வளவாளர்களின் பங்களிப்புடன், ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இப்பயிற்சி திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال